• Apr 18 2025

மீண்டுமொரு வல்லவனா.? சிம்புவின் பர்த்டே ஸ்பெஷலாக களமிறங்கிய போஸ்டர்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு இன்றைய தினம் தனது நாற்பத்தி இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படக்குழுவினர் சார்பிலும் அவருடைய சிறப்பு போஸ்டர்கள், வீடியோக்கள் என்பன வெளியாகி கொண்டுள்ளன. இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காணப்படுகின்றனர்.

"

பிக்பாஸ் சௌந்தர்யா திருட்டு சம்பவத்தில் அரெஸ்ட்.? அதிர்ச்சித் தகவல்

இந்த நிலையில், சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்கள் தொடர்பிலான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் உலகநாயகன் கமலஹாசனுடன் சிம்பு இணைந்து நடிக்கும் தக்லைப் படம் வெளியாக உள்ளது.


இதை தொடர்ந்து ராஜ்குமார் இயக்கத்தில் தனது 49 ஆவது படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளதாம் . மேலும் அடுத்த ஆண்டு சிலம்பரசனின் 49வது திரைப்படம் மற்றும் 50ஆவது திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

மேலும் இன்றைய தினம் சிலம்பரசன் நடிக்கும் 48வது படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் பார்க்கிங் பட இயக்குனருடன் சிம்பு இணைந்துள்ளார். 

மேலும் இந்த படத்தை இட்லி கடை படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அதில் சிலம்பரசன் கல்லூரி மாணவனாக நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement