• Apr 12 2025

விஜயின் த. வெ .க கட்சியை நக்கலாக கலாய்த்து தள்ளிய தமிழிசை

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய அரசியல்வாதியும் தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநராகவும்  விளங்குபவரே தமிழிசை. அவர் நேர்காணல் ஒன்றில் தளபதி விஜயின் த.வெ. க கட்சியினை பற்றி நக்கலாக கதைத்துள்ளார்.

அதில் , விஜய் த.வெ .க கட்சி தொடங்கி தற்போது ஒரு வருடம் ஆகியுள்ளது என நடுவர் ஒருவர் கூறிய போது தமிழிசை அதற்கு  " ஓ கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆச்சா " என ஆச்சரியத்துடன் கேட்டார்.

மேலும் விஜய் அதிகளவு நேரத்தை திரைப்படங்களை வெளியிடுவதிலேயே செலவு செய்கின்றார். அப்படி செய்யாது அரசியலிலும் மக்களோடு மக்களாக இறங்கி வந்து பணிகளை செய்வதிலும் அதிகளவு நேரத்தை செலவு செய்தால் மகிழ்ச்சி என தெரிவித்தார்.


அதேவேளை தொலை தூரத்திலும் தொலை நோக்கிலும்  இருந்து அரசியல் செய்யவதே விஜயின் நோக்கமாக இருப்பதுடன்  work from ஹோமில் இருந்து மற்றும் இணையத்தளத்தின் ஊடாக வேலை செய்தால் சரி என்று விஜய் நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

எங்களைப் போன்ற தலைவர்கள் மக்களோடு மக்களாக வந்து வேலை செய்தால் தான் நல்லது அதனை விஜய் ஜோசித்து முடிவெடுக்கட்டும் என்றார் தமிழிசை.


Advertisement

Advertisement