• Dec 26 2024

பகத் பாசிலுடன் மீண்டுமொரு சம்பவமா? அசத்துறாரே வைகைப்புயல்..! வெளியான போஸ்டர்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக காமெடியில் கிங்காக கலக்கி வருபவர் தான் வடிவேலு. இதுவரை காமெடி கேரக்டரில் மட்டுமில்லாமல் குணச்சித்திரம் மற்றும் ஹீரோவாகவும் கலக்கியுள்ளார். இவர் இறுதியாக நடித்த மாமன்னன் திரைப்படம் அவர் மேலிருந்த ஒட்டுமொத்த பிம்பத்தையும் தலைகீழாக மாற்றியது.

பல ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் களம் இறங்கிய நடிகர் வடிவேலுக்கு இது ஒரு கம்பேக்காக காணப்பட்டது. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'கேங்கர்ஸ்' என்ற படத்தில் நடித்து  வருகின்றார். நேற்றைய தினம் வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப் படத்தின் அதிகாரபூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில், வடிவேலு நடிக்கும் மற்றும் ஒரு படத்தின் போஸ்டரும் வெளியாகி உள்ளது. அதாவது சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து அசத்திய ஆர்.பி சவுத்ரியின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம் தற்போது தமிழ் திரையுலகில் 'மாரீசன்' என்ற படத்தை தயாரித்து  உள்ளது. இதன் மூலம் ஆர்பி சவுத்ரி மீண்டும் தயாரிப்பாளராக கம்பேக் கொடுத்துள்ளார். இந்த படம் யுவன் சங்கர் ராஜா இசையில் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ளது.

 

மேலும் 'மாரீசன்' படத்தில் ஏற்கனவே மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவுடன் நடித்து பட்டையை கிளப்பிய பகத் பாசில் இணைந்துள்ளார். இது ஒரு காமெடி கலந்த அட்வென்ச்சர் படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன .

ஆகவே விரைவில் வடிவேலுவின் 'கேங்கர்ஸ்' மற்றும் 'மாரீசன்' ஆகிய திரைப்படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement