சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜை வேலைக்கு கிளம்பி செல்லுமாறு சொல்லிவிட்டு இனிமேல் கதவை சாத்த வேண்டாம் என்று ரோகிணிக்கு கட்டளை இடுகின்றார் விஜயா.
இதை தொடர்ந்து முத்து கிச்சனுக்கு செல்ல, அங்கு வைத்து ரோகிணி சிட்டியிடம் பணம் வாங்கிய விஷயத்தையும் முத்துவிடம் மீனா சொல்லுகின்றார். அதுவும் ஒரு முறை இல்லை பலமுறை வாங்கியதாகவும் சொல்ல, அப்படி என்றால் இதில் பண விஷயம் மட்டும் இல்லை வேறு ஒரு ரகசியமும் இருக்கின்றது கண்டுபிடிக்கிறேன் என்று முத்து சொல்லுகின்றார்.
இன்னொரு பக்கம் அண்ணாமலையிடம் ரோகிணி சென்று, தான் மனோஜுக்காக தான் எல்லாவற்றையும் பண்ணினேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்கின்றார். அதற்கு அண்ணாமலை என்னதான் இருந்தாலும் பண விஷயத்தை மறைத்தது தப்பு தான் அதை சொல்லி இருக்க வேண்டும் என்று சொல்லிச் செல்லுகிறார் .
இதை தொடர்ந்து எல்லோரும் சாப்பிடுவதற்கு இருக்க, ரோகிணியை ஸ்ருதி சாப்பிட வருமாறு அழைக்கின்றார். ரோகிணியும் வந்து சாப்பிடுவதற்கு அமர, எழும்பி அங்காலே போகுமாறு விஜயா சொல்கின்றார். இதனால் மீனாவும், ரவி, ஸ்ருதி ஆகியோர் ரோகினிக்கு சப்போர்ட்டாக கதைக்க, எனக்காக யாரும் கதைக்க வேண்டாம் நான் இனிமேல் இங்கே சாப்பிட மாட்டேன் என்று கிளம்பி செல்கிறார் ரோகிணி.
அதன் பின்பு பார்வதி வீட்டுக்குச் சென்று அழுது ஒப்பாரி வைத்து தான் மனோஜூகாக தான் இப்படி எல்லாம் பண்ணினேன் என்று சொல்லுகின்றார். ஆனாலும் பார்வதி நீ விஜயாவிடம் சொல்லி இருந்தால் விஜயாவே இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பார் என்று சொல்கின்றார்.
இறுதியில் தான் விஜயாவை கூப்பிட்டு கதைக்கின்றேன் நீயும் எனக்கு பொண்ணு மாதிரி தார் என்று ரோகிணிக்கு சமாதானம் சொல்லி அனுப்புகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!