அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனாலும் தற்போது அது தொடர்பில் எதுவித செய்தியும் வெளியாகாமையினால் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர்.அது மட்டுமல்லாமல் சிலர் இயக்குநர் மகிழ் திருமேனியை போனில் அழைத்தும் படம் எப்போது வெளியாகும் என கேட்டுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
இருப்பினும் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அவர்களும் நேற்றைய தினம் பின்னணி இசையமைப்பின் போது எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு படம் வெளியாவதற்கான வேலைகள் இடம் பெறுவதை உறுதி செய்திருந்தார்.
இருப்பினும் இப் படம் தொடர்பில் சென்சார்கள் எதுவும் வெளிநாட்டில் வெளியாகவில்லை இருப்பினும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 15 நாட்களுக்கு முன் சென்சார் செய்திருந்தால் தான் பொங்கல் வெளியீடு சாத்தியமாகும் என்றும் வெளிநாட்டு தகவல்கள் ஒரு புறம் இருக்க உள்நாட்டில் சென்சார் செய்யும் உத்தியோகத்தர் 5 நாட்கள் லீவில் உள்ளாராம்.அவர் லீவு முடிந்து வந்ததும் இப் படத்திற்கான சென்சார் வேலைகளை செய்ய தீர்மானித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!