விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் சுவாரஷ்யமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8ல் நேற்று கல் கோட்டையை கட்டும் வீக்லி டாஸ்க் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. வீக்லி டாஸ்க் இரண்டாம் நாளான இன்று என்ன நடைபெறுகிறது என்று பார்ப்போம்.
அன்ஷிதா மற்றும் பவித்ரா அணியை டார்கெட் செய்து மற்ற அணி போட்டியாளர்களான ஜாக்குலின், மஞ்சுரி கற்களை எடுக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களின் மேலே உருண்டுபிரண்டு ஒருவாறு ஜாக்குலின் ஒரு கல்லை எடுத்து தனது அணியிடம் கொடுக்கிறார். இதனால் கோபமடைந்த பவித்ரா "2 டீம் இருக்கீங்க ஏன் எங்களை மட்டும் டார்கெட் பண்ணுறீங்க? நீங்க விளையாடுறது சரியா?" என்று கத்துகிறார். அடுத்து அன்ஷிதா "அந்த கல்லை கொடு பவி அவங்க விளையாடட்டும்" என்று சொல்கிறார். உடனே பவித்ரா அந்த கல்லை தூக்கி எறிகிறார்.
"d_i_a
பின்னர் ஜாக்குலின் "உங்களுக்கு வலிக்குதுனா விடுறேன் தானே அப்ப நீ மட்டும் ஏன் இப்படி பண்ணுற" என்று கோபமாக கத்துகிறார். அதற்கு அன்ஷிதா "சரி டி இப்ப வா வா இப்ப வா" என்று மீண்டும் கத்துகிறார். இதனால் ஜாக்குலின்-அன்ஷித்தாவிற்கிடையில் பயங்கர சண்டை ஏற்படுகிறது. மற்ற போட்டியாளர்கள் அவர்களை தடுக்க முயற்சி செய்கிறார்கள். "நான் ஒன்னுமே பண்ணவில்லை அவதான் கத்துறா, நான் இனி விளையாடவில்லை" என்று மைக் மற்றும் கோட்டை கழட்டிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விடுகிறார் அன்ஷிதா. இத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. இனி என்ன நடைபெறப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!