• Dec 25 2024

எச்சரிக்கை:- பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம்! அறிக்கை வெளியிட்ட படக்குழு!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் தான்  'தி ராஜா சாப்'. இப்படத்தின் டீசர் ரிலீஸ் தொடர்பான பொய்யான வதந்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில் இது குறித்து படக்குழு " பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம்"  ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 


இயக்குநர் மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் திகதி ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டின் போது வெளியாகும் என பல்வேறு ஊடகங்கள் இச் செய்தியை பரப்பி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் ஆர்வமாக அந்த செய்தியை ஷேர் செய்து வருகிறார்கள்.


இதனை கவனித்த தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் "தி ராஜா சாப் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து இரவு பகலாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இதன் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம் காத்திருங்கள், இணையத்தில் பரவும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று வெளியிட்டுள்ளனர். இந்த விடையம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.    


Advertisement

Advertisement