• Jan 14 2025

ஆர்யா பட இயக்குனர் தான் அனுஷ்கா ஷெட்டியின் மாப்பிள்ளையா? 4 ஆண்டு காதல் என தகவல்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


நடிகை அனுஷ்காவுக்கு தற்போது 42 வயதாகும் நிலையில் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். இந்நிலையில் சமீப காலமாக அவரது திருமணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது. குறிப்பாக நடிகர் பிரபாஸ் தனது திருமண அறிவிப்பை மறைமுகமாக வெளியிட்ட நிலையில் அனுஷ்காவும் தனது ஆதரவாளர்கள் மூலம் திருமண தகவல்களை கசிய விட்டு செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான இயக்குனர் ஒருவரை திருமணம் செய்ய போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’இஞ்சி இடுப்பழகி’. இந்த படத்தின் கேரக்டருக்காக தான் அனுஷ்கா தனது உடல் எடையை அதிகரித்தார் என்றும் அதன் பிறகு ஒரு யோகா டீச்சர் ஆக இருந்தும் மீண்டும் அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது.



இந்த படம் சுமாராக இருந்தாலும் இந்த படத்தின் இயக்குனர் பிரகாஷ் என்பவர் உடன் அனுஷ்காவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் பிரகாஷ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றதாக கூறப்படும் நிலையில் அனுஷ்காவின் குடும்பத்தினர் விரைவில் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் பிரகாஷ் மற்றும் அனுஷ்கா திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாகவும் இந்த திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் என்று ஏற்கனவே பல கிசுகிசுக்கள், வதந்திகள் வெளியான நிலையில் பிரகாஷ் உடன் திருமணம் என்பது உண்மையாக இருக்குமா? அல்லது இதுவும் ஒரு வதந்தியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement