• Jan 11 2025

‘அஜித்’ படத்தில் நடித்த நடிகையை கொலை செய்த கணவர்.. பரிதாபத்தில் 2 பெண் குழந்தைகள்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

கன்னட நடிகை ஒருவரை அவரது கணவரே கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அவரது இரண்டு குழந்தைகள் தற்போது பரிதாபகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

கன்னட திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வித்யா மைசூரைச் சேர்ந்த வித்யா.  இவர் சிரஞ்சீவி சார்ஜா நடித்த ’அஜித்’ என்ற படம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும், சிவராஜ் குமார் நடித்த ’பஜ்ரங்கி’ படத்தில் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் மைசூரில் நடிகை வித்யா தனது கணவர் நந்திஷ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று அவருக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. நள்ளிரவில் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காலையில் குழந்தைகள் அழுது கொண்டிருந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது வித்யா தலையில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதை அறிந்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில் போலீசார் உடனடியாக இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வித்யா கணவர் நந்திஷ் தனது மனைவி வித்யாவை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக  தெரிகிறது. அவரை பிடிப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வித்யாவின் இரண்டு குழந்தைகள் தற்போது தாய் தந்தை ஆகிய இருவரும் இல்லாமல் பரிதாபமாக இருக்கும் நிலையில் அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் குழந்தைகளை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. பல படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்த வித்யா, காங்கிரஸ் கட்சியின் மைசூர் நகர செயலாளராக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement