தமிழ் சினிமாவுக்கு பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, சர்கார் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ஹிட் அடித்திருந்தன.
இந்த நிலையில், ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த சிகந்தர் படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளதோடு சந்தோஷ் நாராயணன் இந்த படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகியுள்ளார்.
ஏ. ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகை ஆன ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
d_i_a
இன்னொரு பக்கம் இந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிகந்தர் படத்தையும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகின்றார். இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். இந்த படத்தின் டீசர் நேற்றைய தினம் சல்மான் கானின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருந்தது.
எனினும் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை தொடர்ந்து இந்த படத்தின் டீசர் வெளியிடுவதை ஒருநாள் தள்ளி வைத்தனர். அதன்படி இந்த படத்தின் டீசர் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
சிகந்தர் படத்தின் டீசர் அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகளால் நிறைந்துள்ளது. கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் வசூரில் மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. அதில் ஷாருக்கான் நாயகனாக நடித்திருந்தார்.
இதேவேளை, பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கானுக்கு அதிக போட்டி நிலாவி வரும் நிலையில் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் சிகந்தர் படத்திற்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
Listen News!