• Dec 29 2024

ரத்துசெய்யப்பட்ட இசை நிகழ்ச்சி! வருத்தம் தெரிவித்த விஜய் ஆண்டனி!

subiththira / 15 hours ago

Advertisement

Listen News!

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி இன்று சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லாரி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் அதற்கு அரசினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. 


இசையமைப்பாளராக திரைத்துறையில் அறிமுகமான இவர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனத்தில் நடிகராகவும் இடம்பிடித்தார்.  தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும். நடிகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் இன்று மாலை சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லாரி மைதானத்தில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி  20 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடினால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இவரின் இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில். "சில எதிர்பாராத காரணங்களாலும், மற்றும் தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசணையின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த விஜய் ஆண்டனி 3.0 இசை நிகழ்ச்சி. வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்" .  என்று பதிவிட்டுள்ளார். 


Advertisement

Advertisement