• Dec 25 2024

மீண்டும் ஃபுல் பார்மில் ஏஆர் முருகதாஸ்.. ரூ.400 கோடி பட்ஜெட் படத்தில் இயக்க ஒப்பந்தம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் .ஆர். முருகதாஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்ததர்பார்திரைப்படத்தை இயக்கிய நிலையில் அதன் பிறகு நான்கு ஆண்டுகள் எந்த திரைப்படத்தையும் இயக்காத நிலையில் தற்போது தான் அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் இடம் ஒரு கதை கூறி அந்த படமும் உறுதி செய்யப்பட்ட நிலையில் தான் திடீரென ஏஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக எந்த படமும் இல்லாமல் இருந்த ஏஆர் முருகதாஸ், ‘எஸ்.கே.23   என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சல்மான் கான் படத்தையும் இயக்குவதற்கு ஒப்புக் கொண்டு உள்ளார்.



பிரமாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி என்றும் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் வெளிநாட்டு பாடல் காட்சிகள், சர்வதேச அளவில் இருக்கும் ஒரு பிரச்சனையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் பாலிவுட்டில்கஜினிஎன்ற படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் அவர் முழுக்க முழுக்க தமிழிலேயே கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது மீண்டும் பாலிவுட் செல்ல உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சமீபத்தில் அட்லி இயக்கிய பாலிவுட் படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் ஏஆர் முருகதாஸின் அடுத்த பாலிவுட் படமும் மிகப்பெரிய வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement