• Dec 25 2024

9 வயதில் கார் வாங்கிய ‘அரண்மனை 4’ குழந்தை நட்சத்திரம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

‘அரண்மனை 4’ திரைப்படத்தில் தமன்னாவின் மகளாக நடித்த 9 வயது குழந்தை நட்சத்திரம் புத்தம் புதிய கார் வாங்கி உள்ளதை அடுத்து அந்த நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

திரை உலகில் மட்டும் தான் பிறந்த குழந்தை முதல் 100 வயது நபர் வரை நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் பல பெரியாளான பிறகு என் ஹீரோ, ஹீரோயின்களாகவும் மாறி உள்ளனர் என்பது தெரிந்தது.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தேவ நந்தா. இவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் தமிழில் வெளியான ‘அரண்மனை 4’ திரைப்படத்தில் தமன்னாவின் மகளாக நடித்திருந்தார் என்பதும் அவருடைய இயல்பான நடிப்பு ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றது என்பதும் தெரிந்தது.

தற்போது அவர் தெலுங்கு மலையாளம் தமிழில் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் 9 வயதிலேயே அவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு நட்சத்திரமாக மாறி உள்ளார். இந்நிலையில் தேவநந்தா, புத்தம் புதிய டொயோட்டா இன்னோவா ஹை கிராஸ் என்ற காரை வாங்கி உள்ள நிலையில் இந்த காரின் புகைப்படம் அவரது சமூக வலைதளத்தில் பதிவாகியுள்ளது.

கருப்பு நிறத்தில் கார் வாங்கிய தேவநந்தா, அதே நிறத்தில் தனது பெற்றோருடன் ஆடை அணிந்து இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 9 வயதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி கை நிறைய சம்பாதிக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் பலருக்கு வழிகாட்டியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement