• Dec 26 2024

திருச்சில இருந்து இதுக்காகத்தான் சென்னை வந்தம்... இனி யாரும் இப்படி செய்யாதீங்க... ஆதங்கத்தில் பேட்டி அளித்த அறந்தாங்கி நிஷா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி kpy நிஷா வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை வாசிகளுக்கு உதவுவதற்கு முன் வந்த போது தனக்கு யாரும் இந்த உதவியை செய்யவில்லை, இனி இப்படி செய்யாதீர்கள் என ஒரு வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது சென்னை முழுவதும் சமீபத்தில் ஏற்பட்ட புயல், மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலரும் தங்கள் உடமைகளை இழந்து உணவு ,நீர் இன்றி கஷ்ட்ப்படுகின்றனர். இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுகள் வழங்கபட்டு வருகிறது.  அரசாங்கத்தினால் ஒரு புறம் உணவுகள் வழங்கப்படுவதோடு  மறுபுறம் விஜய் , சூர்யா முதலிய நடிகர்களின் சார்பிலும் ரசிகர்கள் சென்று உணவுகளை வழங்கி வைக்கின்றனர்.


அதேபோல தற்போது விஜய் டிவி கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிஷா திருச்சியில் இருந்து சென்னையில் பாதிக்கபட்ட மக்களுக்காக உணவுகளை வழங்குவதற்கு தயார் செய்து நிறைய இடங்களில் கார்களுக்கு கேட்டு எங்களுக்கு தரவில்லை, நிறைய கால் டாக்சிக்கு எல்லாம் கால் பண்ணி கேட்டும் சென்னை என்றதும் வரமாட்டம் என்று சொல்லி விட்டார்கள்.


சரி பரவாயில்ல என்று எங்களுடைய காரில் தான் ஏற்றி வந்து இருக்கிறோம், கார் முழுவது உணவுகள் தான் இருப்பதற்கு இடம் இல்லை, தாம்பரத்தில் 1000 உணவுகளுக்கு சொல்லி இருக்கிறோம், அங்க போயிட்டு சாப்பாட்டை எடுத்து கொண்டு மக்களை தேடி போக வேண்டும். தயவு செய்து யாராவது சென்னை போறதுக்கு கேட்ட உதவி செய்ங்க கார் ஒன்னும் தண்ணில போயிராது, எங்க கார் போயிட்டு வரத்தான் போகுது என நிஷா ஆதங்கமாக கூறியுள்ளார்.

     

Advertisement

Advertisement