• Dec 26 2024

அர்ச்சனா Fake -ஆம்.... மாயாவின் வெற்றி உறுதியானது! CODE WORD சொன்ன விக்ரம்! எச்சரிக்காத பிக் பாஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் பரபரப்பாக நகர்கின்றது. இதற்கு காரணம் இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யாரென அறிந்து கொள்வதற்காக தான்.

பிக் பாஸ் சீசன் 7 இன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களோடு பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் இறுதி கட்டத்தில் தற்போது 5 போட்டியாளர்கள் மக்களால் தேர்வாகி உள்ளனர்.

பிக் போஸ் வீட்டிற்கு தற்போது பழைய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வருவதால் சற்று சுவாரஸ்யமாக காணப்படுகின்றது.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்கு வந்த விக்ரம், மாயா, அர்ச்சனா பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். அது தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதன்படி அவர் கூறுகையில், 

பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே இருந்து பார்த்தா அர்ச்சனா தான் டைட்டில் வின் பண்ணுவாங்க என்று சித்தரிக்கப்படுது. ஆனா அவங்க fake -அ இருக்காங்க என விக்ரம் சொன்னதோடு, மாயா நீங்க நம்பிக்கைய விடாதீங்க. ஹோப் ஆக இருங்க. இன்னும் ஐந்து நாள் இருக்கு தானே பாத்துக்கலாம் என விக்ரம் மாயாவிடம் சொல்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன விக்ரம் முதல், விஜய் வர்மா, பூர்ணிமா, ஜோவிகா ஆகியோர் முதல் முக்கிய போட்டியாளர்கள் மாயாவுக்கு சப்போர்ட் பண்ணுவது நாம் அறிந்ததே.


அதேவேளை, பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் வனிதா விஜயகுமாரும் மாயாவுக்கு தான் ஆதரவு என்பது போல அடிக்கடி வீடியோக்களை பகிர்வார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் முதல் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் வரை தற்போது மாயாவுக்கே ஆதரவு செய்வது போல் தமது கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர்.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டிற்கு வந்த விக்ரம், வெளியே நடக்கும் விடயங்களை கோர்ட் வேர்ட் மூலம் கதைத்த போதிலும் பிக் பாஸ் அவரை கண்டிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement