• Dec 26 2024

சின்ன ட்ரெஸ்ல செருப்பு போடாமல் ஆடவே முடில- கமலுடன் ஆடியதால் நடிப்பை விட்டே போக முடிவெடுத்த நடிகை சில்க் ஸ்மிதா

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா.இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ் என ஏராளமான நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார். இவருக்கு கவர்ச்சி காட்டாமல் நடிக்க வேண்டும் என்பது ஒரு ஆசையாக இருந்ததாம்.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் அப்படி ஒரு வேடத்தை அவருக்கு பாரதிராஜா கொடுத்தார். இப்படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் முதல் பலரும், சிலுக்கு இதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து நடிக்கவேண்டும் என அவருக்கு அறிவுரை சொன்னார்கள். அவருக்கும் அந்த ஆசை இருந்தது.


ஆனால், தமிழ் சினிமா உலகம் அவரை கவர்ச்சி கன்னியாக மட்டுமே பார்த்தது. கிராமப்புற வேடங்களிலும், கவர்ச்சி நடனமாடும் பெண்ணாகவும் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க அவருக்கு வித்தியாசமான வேடங்களை கொடுத்தவர் இயக்குநர் பாலுமகேந்திரா. அவரின் படங்களில் நகரத்து பெண்ணாகவும், பணக்கார பெண்ணாகவும் நடித்திருக்கிறார்.

பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படத்திலும் கமல் மீது ஆசைப்படும் பணக்கார பெண்ணாக வருவார். பொன்மேனி உருகுதே என்கிற பாடலிலும் கவர்ச்சி நடனம் ஆடியிருப்பார். ஒருமுறை இந்த பாடலில் நடித்தது பற்றி பேசிய சிலுக்கு ‘பெரிதாக உடை எதுவுமில்லாமல், காலில் செருப்பு கூட இல்லாமல், ஊட்டி குளிரில் அந்த பாடலில் கமலுடன் நான் நடனமாடியபோது கதறி அழுவேன். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு போய்விடலாம்’ என்று கூட நினைத்திருக்கிறேன்.


ஆனால், அப்பாடலை திரையில் பார்க்கும்போது அவ்வளவு அற்புதமாக இருந்தது. தியேட்டரில் அந்த பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்தபோது நான் பட்ட கஷ்டமெல்லாம் மறந்துபோனது. அந்த படத்திற்கு பின் அதுபோல எனக்கு நிறைய நல்ல வேடங்களும் கிடைத்தது’ என சில்க் ஸ்மிதா கூறியிருக்கிறார்.


Advertisement

Advertisement