• Apr 24 2026

ரவீனாவை கட்டிப்பிடித்து கசக்கியெடுத்த அர்ச்சனா.. பிக் பாஸ் வீட்டில் இப்படியும் ஒரு அதிர்ச்சி சம்பவம்? வீடியோ இதோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இது வரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களை விட இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இரண்டு வீடுகள் மற்றும் புதிய விதிமுறை என வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல, இந்த முறை சீசனில் தான் அதிக வைல்ட் கார்ட் என்ட்ரிகளும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அதன்படி வந்த ஐவரில் தற்போது தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் தான் தமது ஆட்டத்தை சிறப்பாக விளையாடி வருகின்றனர்.


பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்டு பாதி நாட்களில் இவர்கள் உள்ளே வந்து இருந்தாலும், மக்கள் மத்தியில் விரைவாகவே அமோக வரவேற்பை பெற்றனர்.

அதுமட்டுமின்றி, பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் வந்த பிறகு தான் ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. ஆரம்பத்தில் அழுது புலம்பிய அர்ச்சனா போக போக ஆட்டத்தை புரிந்து கொண்டு தற்போது அனைவரையும் அடக்கி ஆளும் ஆவேச அர்ச்சனாவாக உருமாறிவிட்டார்.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமாவின் விவகாரத்தை பற்றி அடிக்கடி பேசும் அர்ச்சனா, தற்போது ரவீனாவுடன் கட்டிப்பிடித்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

அதன்படி, குறித்த வீடியோவில் சோஃபாவில் இருக்கும் அர்ச்சனாவும் ரவீனாவும் கட்டிப்பிடித்து உருளுகின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை வைச்சு செய்து வருகின்றனர். தற்போது குறித்த வீடியோ பேசுபொருளாகி, வைரலாகி உள்ளது.



Advertisement

Advertisement