• Dec 26 2024

அவள் திருந்தவே இல்ல.. எனக்கு செருப்ப கழட்டி அடிச்சாங்க.. எங்க அம்மா ரொம்ப பாவம்! நாங்க பிரிஞ்சிட்டோம்னு கதறியழுத தேசராணி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களின் ஊடக, குறிப்பாக இன்ஸ்டாகிராம், டிக் டொக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆனவர்கள் தான் Dora - Buji ஜோடி. இவர்கள் தற்போதைய 2K கிட்ஸ் மத்தியில் மிகவும் ரசிக்கப்படக்கூடிய ஜோடியாக வலம் வந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட Buji, அதாவது தேசராணி அவர்கள், தனது யூடியூப் பக்கத்தில் நாங்க பிரிஞ்சிட்டோம் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்றை தமது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன்படி அவர் மேலும் கூறுகையில்,


'நான் வியூஸ்க்காக இந்த வீடியோ போடல. உங்களுக்கும் உண்மை எல்லாம் தெரியணும் என்று தான் போடுறன். அவங்க இப்போ தப்பான பழக்கத்திற்கு அடிமை ஆகிட்டாங்க. நான் எவ்வளவோ சொல்லி பாத்தன். ஆனா ஹரி திருத்திர மாதிரியே இல்ல. திரும்ப திரும்ப தப்பு பண்ணுறான்.

அவனுக்கு மஞ்சகாமாலை வந்தப்போ நான் கூடவே இருந்து பாத்துக்கிட்டன். அதுக்கு பிறகு நான் தப்பு பண்ண மாட்டன் என்று தான் சொன்னான். ஆனா அவன் திருந்தவே இல்ல. நானும் எத்தின சான்ஸ் தான் குடுக்கிற. அவங்க வீட்ட போய் சொன்னா அவங்க பெருசா எடுக்கவே இல்ல.

இப்ப நிறைய பேர் எனக்கு மெசேஜ் பண்ணி இருக்காங்க. நாங்க காசு குடுத்து இருக்கம் என்று.. ஆனா நான் எந்த ப்ரோமோஷனும் பண்ணுவன் என்று காசு வாங்கல. எல்லாமே அவன் தான் பாத்திட்டு இருந்தான். அவ்வளவு நம்பிக்க வச்சு இருந்தன். ஆனா அந்த காச எல்லாம் எடுத்து தப்பான பழக்கத்திற்கு யூஸ் பண்ணிட்டாங்க. இப்போ எல்லாரும் என்னட்ட கேக்கிறாங்க. நானும் காசு விசயத்துல நிறைய ஏமாந்துட்டன்.


நாங்க கார் வாங்கினது வீடியோ செய்த காசிலையோ, இம்ஐலையே இல்ல. எங்க அம்மா தான் வாங்கி தந்தாங்க.. நான் எங்க அம்மா கிட்ட கேட்டன். அம்மா தான் எனக்கு போன், கார், கமெரா எல்லாம் வாங்கி தந்தாங்க.. எங்க அம்மா மீன் விக்கிறவங்க. ரொம்ப கஷ்டப்பட்டு, வெயில்ல நின்னு மீன் விற்பாங்க.. அந்த காசுல தான் 5 லட்சம் தந்தாங்க.. கார் வாங்க.. அதுல கூட 2 லட்சத்த எடுத்துட்டார் ஹரி. கணக்கு கேட்டா மறந்துட்டன் என்று சொல்லுவார். எல்லாம் அந்த தப்பான பழக்கத்திற்கு தான்.


நான் அவங்க வீட்ட போய் உங்க பொண்ணு தப்பான பழக்கத்திற்கு அடிமையாகி ஊசி போடுது என்று சொன்னப்போ, அவங்க அக்கா என்ன செருப்பால அடிச்சாங்க.. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டன்..

ஆனா எங்க  அம்மா பாவம்.. யார் வீட்டுல இப்படி எல்லாம் ஒத்துப்பாங்க.. அவன கௌரவமா தான் வச்சிருந்தன். ஆனா என்ன இப்படி ஏமாத்திட்டான். எனக்கு இனி அவன் கூட வாழ முடியாது' என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement