• Dec 26 2024

அர்ச்சனாவின் டிரஸ் steam பேட்டி.. வந்ததுல பாய்சன் என்டா அர்ச்சனா தான்! TheDhaadiBoy பிரதீப்பின் வைரல் வீடியோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 பிரமாண்டமாக நடந்து முடிந்தாலும் அதில் இடம்பெற்ற சச்சரவுகள் இன்றளவில் மட்டும் புகைந்துக் கொண்டே தொடர்கின்றன.

அதிலும் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட விடயம், தற்போது வரையில் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகவே உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்கள் இடையே காணப்பட்ட சண்டைகள், வன்மங்கள், புறம் பேசுதல் ஆகியவை தற்போது மீண்டும் வைரலாகி கொண்டு வருகின்றது.

அதற்கு காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த போட்டியாளர்கள் தற்போது ஒவ்வொருவரைப் பற்றியும் பேட்டி கொடுத்து வருவது தான்.


இந்த நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆன அர்ச்சனா பற்றி பிரதீப்  பேசிய வீடியோ ஒன்று மீண்டும் வைரல் ஆகியுள்ளது.

அதில் பிக் பாஸ் வீட்டிற்கு ஆரம்பத்தில் வந்த ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரிகளில் அன்னபூர்ணியும் புரோவும் தான் வெரி ஸ்மார்ட் என்று பிரதீப் ஐஷுவிடம் சொல்லியுள்ளார்.


மேலும், கானா பாலா மற்றும் தினேஷ் பற்றி நல்ல விதமாக கூறிய பிரதீப், இருக்கிறதிலேயே போசன் என்றால் நம்ம அர்ச்சனா தான் என்று சொல்லி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

அண்மையில் பேட்டி வழங்கிய அர்ச்சனா, அதில் பிரதீப் பெண்கள் விடயத்தில் ரொம்ப நல்லவர், எனக்கு டிரஸ் அயன் பண்ணி கூட தந்தார் என சொல்லி இருந்தார். அதற்கு தற்போது பிரதீப் என்ன கூறி இருக்கிறார் என்றே வீடியோ வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement