• Dec 26 2024

கடக ராசிக்காரர்களே..! அடுத்த நாலுமாசம் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க..! சீரியல் நடிகையின் திடீர் அட்வைஸ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான பாயும் புலி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹேமா ராஜ்குமார். 

அதன் பின்னர் நடிகர் அருள்நிதி நடித்த ஆறாவது சினம் என்ற படத்தில் வில்லத்தனமாக நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து சின்ன திரைக்கு வந்து விட்டார் என்றே சொல்லலாம்.

விஜய் டிவியில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலாவது பாகம் முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாவது பாகத்திலும் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர், சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல் ஒரு தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து அதன் போட்டோக்களை போஸ்ட் செய்து வருவார். 


இந்த நிலையில், ஹேமா ராஜேஷ் அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், கடக ராசிக்காரர்களே ரொம்ப ஜாக்கிரதையா இருங்க என கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், நான் வெளியில் செல்லும் போது காரை சுத்தமாக நன்றாக தேய்த்து கழுவி சுத்தமாக துடைத்து தான் அதில் செல்ல விரும்புவேன்.

ஆனால் காரை எப்போது இப்படி கழுவி எடுத்து சென்றாலும் அன்று எனக்கு விபத்து ஏற்பட்டு விடும்.


இப்படித்தான், புத்தாண்டு அன்றும் காரை கழுவி சுத்தமாக்கி ஆசையாக எடுத்துச் செல்ல, ஒரு ஆசாமி வந்து காரில் மோதி விட்டார். அதில் என்னுடைய காரும் பயங்கரமாக சேதமடைந்து விட்டது.

இவ்வாறு, எப்போது நான் காரை சுத்தப்படுத்தி, கழுவி துடைத்து எடுத்துச் சென்றாலும் இதுபோன்ற சின்ன சின்ன விபத்துகள் நடந்து விடுகிறது.


கடக ராசிக்காரர்களுக்கு தான் இதுபோல் வண்டி வாகனங்களில் பிரச்சனை இருக்கிறதாம். அதனால் மே மாதம் வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

நான் எவ்வளவோ கேர்புல்லாக இருந்தாலும் என் கார் விபத்து அடிக்கடி நடந்து விடுகிறது.

எனவே கடக ராசிக்காரர்கள், கார் விஷயத்துல ஜாக்கிரதையாக இருங்க என்று அந்த வீடியோவில் ஹேமா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement