• Dec 26 2024

இந்தியன் 2 பார்த்து Stress ல இருக்கீங்களா? வாங்க ஹெட் மசாஜ் பண்ணலாம்! அதிரடி அறிவிப்பு

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக காணப்படும் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படம் கடந்த 12ஆம் தேதி உலக அளவில் வெளியானது.

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவான இந்தியன் இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற வருகின்றன.

இந்த நிலையில், காரூர் மகாராட்சிக்கு உட்பட்ட தனியார் அழகு நிலையம் ஒன்று இந்தியா 2 படத்திற்கு சென்று Stress இன்க்ரீஸ் செய்து கொண்ட அனைவருக்கும் சலுகை விலையில் மசாஜ் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


மேலும் இந்தியன் 2 படத்திற்கு சென்றதற்கான டிக்கெட் நகல் அவசியம் என்ற வினோதமான விளம்பரம் ஒன்றையும் சமூகவலை பக்கங்களில் வைரல் ஆக்கி உள்ளனர்.


இந்த விளம்பரம் கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியினருக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விளம்பரம் வெளியிட்ட குழுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த தகவல் ரோட்டரி கிளப் வாட்ஸப் குழுவில் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்ட நபர்களுக்கு மாத்திரமே இந்த ஆஃபர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement