• Dec 26 2024

பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான அரோமா மணி திடீர் உயிரிழப்பு!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான அரோமா மணி, அரோமா மூவிஸ் மற்றும் சுனிதா ப்ரொடக்சன் ஆகியவற்றிற்கு சுமார் 60 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு வெளியான "தீரசாமிரே யமுனா தீரே" என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார்.

இதைத்தொடர்ந்து இவருடைய தயாரிப்பில் வெளிவந்த 'திங்கலஞ்ச நல்ல தெய்வம்', தூரே தூரே ஒரு கூடு கூட்டம்' போன்ற படங்களுக்கு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

எனினும் 2013 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான 'ஆர்ட்டிஸ்ட்' என்ற படம் தான் இவர் தயாரித்த கடைசி படமாம்.


இவ்வாறு இவர் கிட்டத்தட்ட ஏழு படங்களை இயக்கியுள்ளார். 1982 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆ திவசம்' இவர் இயக்கிய முதல் படமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான அரோமா மணி காலமாகியுள்ளார். இந்த தகவல் அறிந்த பலரும் அவருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

இவர் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததோடு, அவர் உயிரிழக்கும் போது 65 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement