• Dec 25 2024

கைது செய் கைது செய் குஷ்புவை கைது செய்... விளக்குமாறு, செருப்பு மாலையுடன் குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட மக்கள்... என்ன செய்தார்கள் தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

த்ரிஷா - மன்சூர் அலிகான் விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதற்குள் மற்றொரு சர்ச்சையை பற்ற வைத்துள்ளார் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு. த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்த நடிகை குஷ்பு, இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


மேலும், பிறர் செய்த தவறுகளை உதாரணம் காட்டி, தங்களது தவறுகளை சிலர் மறைக்க முயற்சிப்பதாகவும் பதிவிட்டிருந்தார் நடிகை குஷ்பு. அவரது இந்த கருத்து சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மணிப்பூரில், பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதற்கு கருத்து தெரிவிக்காமல், நடிகை என்பதால் த்ரிஷாவுக்கு மட்டும் கருத்து தெரிவிப்பதா என குஷ்புவுக்கு சற்று காட்டமாக பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.


இதனால், ஆத்திரமடைந்த குஷ்பு, திமுக ஆதரவாளர் ஒருவர் இது தொடர்பாக செய்த சர்ச்சைக்குரிய பதிவை மேற்கோள் காட்டி, சில திமுக-வினர் பெண்களை அவமதிக்க தவறான மொழியை கையாள்வதாக பதிவிட்டார். அத்துடன், உங்களைப் போல் சேரி மொழியில் பேச முடியாது என்றும் பதிவிட்டிருந்தார். அதுதான், தற்போதைய சர்ச்சைக்கு காரணம்.


சேரிமொழி என குஷ்பு பதிவிட்ட சில நிமிடங்களிலேயே பலரும் அதை டேக் செய்து கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை காயத்ரி ரகுராமும் பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய நடிகை காயத்ரி, இதை சொல்வதில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்றாலும், தான் தவறை உணர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.


இதற்கு ஊடகவியலாளர்கள் விளக்கம் கேட்ட போது நான் பேசியது தவறு இல்லை பிழையாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்பேன் , சேரி மொழிக்கு அர்த்தம் நீங்கள் சொல்லுங்கள் என தனது கருத்தையும் முன்வைத்திருந்தார். 


இந்நிலையில் அந்த பதிலுக்கு எல்லா செவிசாய்க்காத மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று நடிகை குஷ்பு அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு குஷ்புவின் புகைப்படத்துடனான பேனருக்கு செருப்பு மாலை போட்டு விளக்குமாரினால் அடித்து, சாணம் பூசி கைது செய் கைது செய் குஷ்புவை கைது செய் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.     

Advertisement

Advertisement