• Dec 27 2024

அசோக் செல்வனின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? அவரே அளித்த அப்டேட்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகரான அசோக் செல்வன் நடித்த திரைப்படம் ஒன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக அவரே தனது சமூக வலைதளத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.

நடிகர் அசோக் செல்வன் கடந்த 2013 ஆம் ஆண்டுசூது கவ்வும்என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர்பீட்சா 2’ என்ற படத்தில் நடித்தார்.  இருப்பினும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றுக் கொடுத்த படம் என்றால் அதுதெகிடிதான்.

துப்பறியும் கதை அம்சம் கொண்ட இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு பின்னரே ரசிகர்கள் அவரை ஒரு ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக அசோக் செல்வன் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் என்பதும் அவர் நடித்தபோர்த்தொழில்’ ’சபாநாயகன்’ ’ப்ளூ ஸ்டார்ஆகிய மூன்று படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 
இந்த நிலையில்தெகிடிதிரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வெளியான நிலையில் நேற்று அந்த படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை அடுத்து இந்த படம் குறித்து தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள அசோக்செல்வன், ‘10 ஆண்டுகள் போனதே தெரியவில்லை , நேற்றுதான்தெகிடிபடம் வெளியானது போல் இருக்கிறது, இந்த படத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றிஎன்று தெரிவித்துள்ளார்

மேலும்இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளதை அடுத்துதெகிடி 2’ திரைப்படம் உருவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement

Advertisement