• Dec 26 2024

அடேங்கப்பா..!! இரண்டு பேரும் ஒன்னாவே வச்சு செய்துட்டங்களே..! இதோ வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படுபவர் தான் வனிதா விஜயகுமார். இவர் பழம்பெரும் நடிகராக விஜயகுமாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராக காணப்படினும் அவர்களுடைய குடும்பத்திலிருந்து விலக்கப்பட்ட ஒருவராக தற்போது வரையில் தனியாக வாழ்ந்து வருகின்றார்.

விஜயகுமார் மஞ்சுளாவுக்கு பிறந்தவர் தான் வனிதா விஜயகுமார். விஜயகுமாரின் குடும்பம் எவ்வளவு ஒற்றுமையாக காணப்பட்ட போதிலும் இவருடைய பேச்சுக்களாலும் நடவடிக்கைகளின் காரணமாகவும் தற்போது தனது பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகின்றார். அதற்குவனிதா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த தவறுகளும் காரணமாக காணப்படுகிறது.

அந்த வகையில் வனிதா முதலாவதாக ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மகன் ஒருவர் பிறந்தார். ஆனாலும் அதன் பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதன் பின்பு ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அதுவும் நிலைக்கவில்லை. மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணமும் நிலைக்கவில்லை.


இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அடுத்த திருமணம் எப்போது என  வனிதாவை கிண்டல் அடித்து வந்தனர். அதன்படி சில நாட்களுக்கு முன்பு ராபர்ட் மாஸ்டர் உடன் வனிதா எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பேசு பொருளானது. 

அதில் சேவ் தி டேட் என்று ஐந்தாம் தேதியை குறிப்பிட்டு வனிதா புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த பலரும் வனிதா அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். ஆனாலும் அது ராபர்ட் மாஸ்டருடன் வனிதா இணைந்து படம் ஒன்றை பண்ணுவதாகவும் அந்த படத்திற்கான ப்ரோமோஷன் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள். அதில் பிக் பாஸ் எட்டு ஆரம்பிக்கப்பட உள்ளதை வைத்து சின்ன ப்ரோமோட்  ஒன்றை செய்துள்ளார்கள். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வழக்கம் போல, இருவரும் ஒன்றாக சேர்ந்துட்டாங்களே என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement