• Dec 27 2024

என் மகனிடம் இவர் படம் எல்லாத்தையும் பார்க்க சொல்வேன்: அட்லி கூறிய ஆச்சரிய தகவல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

என் மகன் ஒருவேளை சினிமாவுக்கு வர ஆசைப்பட்டால் அவனிடம் இவருடைய எல்லா படத்தையும் பார்க்க சொல்வேன் என்றும் ஏனென்றால் அவர் ஒரு சினிமா பைபிள் மற்றும் சினிமா என்சைக்ளோபீடியா என்றும் இன்று நடந்த நிகழ்ச்சியில் அட்லி கூறி உள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படத்தின் ப்ரமோஷன் விழா இன்று நடந்த நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக அட்லி கலந்து கொண்டார். ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து, தற்போது அவரையே மிஞ்சும் அளவுக்கு பிரமாண்ட படங்களை அட்லி இயக்கி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது தான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.



’ஒருவேளை என்னுடைய மகன் சினிமா தொழிலில் நுழைய ஆசைப்பட்டு, சினிமாவுக்கு வந்தால், நான் அவனிடம் முதலில் கூறுவது, சினிமாவுக்கு வரும் முன் கமல்ஹாசனின் அனைத்து படத்தையும் பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்வேன். ஏனென்றால் கமல் அவர்கள் ஒரு சினிமா பைபிள் மற்றும் சினிமா என்சைக்ளோபீடியா என்பது எனக்கு தெரியும். விரைவில் ஒரு நாள் நான் கமல்ஹாசன் அவர்களுக்காக ஒரு கதை எழுதுவேன், அந்த கதையில் அவரை நடிக்க வைப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன்’ திரைப்படம் உருவாகும் போது ஷங்கரிடம் உதவி இயக்குனராக அட்லி இருந்தவர் என்பதும் அப்போதே கமல்ஹாசனுக்கும் அட்லிக்கும் நல்ல உறவு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement