• Jan 16 2025

அட்டகத்தி தினேஷின் அடுத்த வேட்டை தயார்! வெளியானது கருப்பு பல்சர்" பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகர் தினேஷ் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியால் இவருக்கு அட்டகத்தி தினேஷ் என்று பெயர் வந்துவிட்டது. லப்பர் பந்து என்ற வெற்றி படத்தினை கொடுத்த தினேஷின் அடுத்த திரைப்படம் தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினேஷ் அட்டகத்தி திரைப்படத்தினை தொடர்ந்து விசாரணை, குக்கூ, தமிழுக்குஎண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்நிலையில் சமீபத்தில் ஹரிஷ் கல்யாணுடன் லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.


தற்போது இவர் இயக்குநர் முரளி கிருஷ் இயக்கத்தில் 'கருப்பு பல்சர்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் மத்தியில் அட்டகத்தி தினேஷின் "கருப்பு பல்சர்" திரைபடத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. காளைக்கு பின்னர் மிரட்டலான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement