மகிழ் திருமேனி - அஜித் குமார் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படம் ஆக்சன், திரில்லர் நிறைந்த ஜானரில் உருவாகியுள்ளது.
லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் அல்லி ராஜா இந்த படத்தை தயாரித்து உள்ளார். விடாமுயற்சி திரைப்படம் பிரபல ஹாலிவுட் படமான பிரேக் டவுன் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக எடுக்கப்பட்டுள்ளது.
d_i_a
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருந்த விடாமுயற்சி திரைப்படம் இறுதி நேரத்தில் பின்வாங்கியது. அதன் பின்பு இந்த மாத இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் புதிய அறிவிப்பு ஒன்றை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் ஜனவரி 16 ஆகிய இன்றைய தினம் சுமார் 6.40 மணியளவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடாமுயற்சி படத்தின் வெளியீட்டு தேதி கூட இத்துடன் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளதோடு அர்ஜுன், ரெஜினா, பிக் பாஸ் ஆரவ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
இதேவேளை விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியான போதும் இறுதி நேரத்தில் தள்ளிப் போகின்றமை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!