• Dec 26 2024

அயலான் நடிகைக்கு விரைவில் டும்.. டும்.. டும்..! வைரலாகும் திருமண அழைப்பிதழ்! மாப்பிள்ளை யாரு தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராகுல் ப்ரீத்தி சிங், தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2  படத்தில்  நடித்து வருகிறார்.

தமிழில் சில படங்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் கார்த்தியின் தீரன் படத்தின் மூலம் பிரபலமானார். அதைத்தொடர்ந்து முன்னணி நடிகையான ரகுல் பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இந்தியிலும் அமிர்தா பச்சன், அஜய் தேவ்கன் என டாப் நடிகர்களுடன்  ஜோடியாக நடித்த புகழ் பெற்றார்.


இவர் ஜாக்கி பாக்னானி  என்ற நடிகரை காதலித்து வருகிறார். அதன்படி, இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகிறார்கள்.

இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உலா வந்த வண்ணமே உள்ளது.


இந்த நிலையில், ராகுல் பிரீத் சிங்கின் திருமண அழைப்பிதலுக்கான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

எதிர்வரும் 21 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரையில் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement