• Dec 27 2024

தமிழில் ஹிட்டடித்த சிறகடிக்க ஆசை சீரியல் ஹிந்தியிலும் ரீமேக்! மீனாவுக்கு டூப் யாரு தெரியுமா? வெளியான ப்ரோமோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. 

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து - மீனா ஜோடியின் கெமிஸ்ட்ரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அதில், சாதாரண குடும்பத்தின் நிகழும் வாழ்க்கைப் பிரச்சினையை எடுத்துக் காட்டுகின்றது.

இதில் ஏழை வீட்டு பெண்ணாக காணப்படும் மீனா பூக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு அவரது கணவர் பக்கத்துணையாக காணப்படுகிறார்.


ஒரு கூட்டுக் குடும்பத்தில் மூன்று மகன்கள், மூன்று மருமகளோடு வாழும் போது மாமியாரால் நடக்கும் பிரச்சினைகள் தான் இந்த சீரியலின் மெயின் கதையாக காணப்படுகிறது.

பணக்கார வீட்டு மருமகளை நோகாமல் பார்த்துக் கொள்ளும் மாமியார், ஏழை வீட்டுப் பெண்ணான மீனாவை மட்டும் எப்போதும் குறை சொல்லிக் கொண்டு, அவரிடம் வேலை வாங்குவதிலும், அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதிலும் தான் குறியாக இருக்கிறார்.


இவ்வாறு தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய  உள்ளார்களாம்.

அதன்படி, குறித்த சீரியலுக்கு Udne Ki Aasha என பெயரிட்டு உள்ளார்கள்.




Advertisement

Advertisement