• Dec 26 2024

பாக்கியா பழனிக்கு கல்யாணம்.. உடனே திட்டம் போட்ட எழில்! ஜோசப் மீண்டும் கொடுத்த அதிர்ச்சி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

பழனி வீட்டுக்கு வந்த பாக்கியா உங்களுக்கு பிடிச்ச கத்திரிக்காய் குழம்பு, இரால் தொக்கு எல்லாம் செஞ்சு கொண்டு வந்து இருக்கேன் என்று சொல்கிறார். அங்கிருந்து கதைத்து விட்டு ரெஸ்டாரன்ட் செல்ல கேப் புக் பண்ண போகிறார் பாக்கியா. ஆனால் பழனியின் அக்கா எங்க வீட்டுக்கு வந்துட்டு எதுக்கு கேப்ல போறீங்க? இங்க எத்தனை கார் இருக்கு என்று பழனியுடன் காரில் அனுப்பி வைக்கிறார்.

பழனிச்சாமி காரில் போகும்போது உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்க, என்ன இதுவரைக்கும் இப்படி யாரும் கேட்ட  இல்ல. எனக்கு எங்க அம்மா செய்து கொடுக்கிற பால் கொழுக்கட்டை ரொம்ப பிடிக்கும். நான் எவ்வளவு முறை செஞ்சாலும் அந்த டேஸ்ட் எனக்கு வரவே இல்லை என்று சொல்ல, பழனி மனசுக்குள் உங்களுக்கு ஒரு நாளைக்கு கட்டாயம் செய்து தருவேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் பாக்கியா ரெஸ்டாரண்டில் அமிர்தாவும் எழிழும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த செல்வி ஹோட்டல்ல எல்லாமே காதல் ஜோடி ஆயிருக்கு,  நீங்களும் காதல் ஜோடியா நின்னுகிட்டு இருக்கீங்க என்று கலாய்க்கிறார்.

அந்த நேரத்தில் பாக்கியாவும் பழனியும் ஜோடியாக வந்திறங்க அதை பார்த்த செல்வி, இன்னொரு காதல் ஜோடி வந்துருச்சு என்று சொல்லி எழிலிடம் அக்காவுக்கும் அண்ணனுக்கும் பிடிச்சிருந்தா நீங்க என்ன பண்ணுவீங்க? என்று கேட்க, உடனே கல்யாணம் பண்ணி வச்சிருவேன் என்று  எழில் சொல்லுகிறார்.


பழனி உள்ளே வந்ததும் பாக்கியா கிச்சனுக்குள் செல்ல, அங்கிருந்த செல்வி நீங்க வாரத்துக்கு முன்னாடி எழில் தம்பி உங்களுக்கும்  அக்காவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேசிட்டு இருந்துச்சு என்று சொல்ல பழனி அதிர்ந்து போய் நிற்கிறார்.

இதைத்தொடர்ந்து பாக்கியா, செழியன் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் ஜெனியின் வீட்டுக்குப் போய் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்க, அங்கே இருந்த ஜோசப் நாங்க கண்டிப்பா வரமாட்டோம் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஆனாலும் பழசு எல்லாம் மறந்துட்டு இரண்டு குடும்பமும் ஒன்னா இந்த தேதியில் நிகழ்ச்சி நடத்தணும் என்று பாக்கியா சொல்ல, குழந்தைக்கு உங்க முறைப்படி தானே பெயர் வைக்க போறீங்க என்று ஜோசப் பதிலடி கொடுக்கிறார்.

ஆனல் நாங்க வீட்லதான் பங்க்ஷன் வச்சிருக்கோம். பங்க்ஷன் முடிஞ்ச பிறகு நீங்க சர்ச் கூட்டிட்டு போய் உங்க வழக்கப்படி பெயர் வையுங்க. எங்க வீட்ல கோவிலுக்கு கூட்டிட்டு போகட்டும் இதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

அதன் பிறகு ஜெனியின் அம்மா எதுக்கு ஜோசப் இப்படி பண்ணுனீங்க. நாம எல்லாத்தையும் மறந்து குழந்தைக்காக இந்த பங்க்ஷனுக்கு போய் தான் ஆகணும் என்று சொல்லுகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement