• Dec 26 2024

2026 ம் ஆண்டு தேர்தலில் களமிறங்கும் பிக் பாஸ் சீசன் 7 பிரபலம்! விஜய் கட்சிக்கு இது நிச்சயமாம்..?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக காணப்படும் கூல் சுரேஷ், விஜய் டிவியில் இறுதியாக இடம் பெற்று முடிந்த பிக் பாஸ் சீசன் 7 இல் கலந்து கொண்டு மேலும் பிரபலமானர்.

இவர் நடிகர் சந்தானம் மற்றும் நடிகர் சிம்புவுக்கு தீவிர ரசிகனாகவும் அவர்களுடைய நண்பராகவும் காணப்படுகிறார். இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தை பார்ப்பதற்கு வித்தியாசமாக பாடையில் சென்றிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்த நிலையில், தற்போது 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கூல் சுரேஷின் கட்சி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



அதாவது, நடிகர் கூல் சுரேஷின் கட்சி CSK என்ற பெயரில் விரைவில் பதிவு செய்யப்பட்டு 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டு போட்டி இடுவோம் அல்லது தமிழக வெற்றிக் கழகத்திற்கு எங்களது ஆதரவை நிச்சயமாக தெரிவிப்போம் என கூல் சுரேஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement