• Dec 26 2024

சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் இடையில்...? நினைச்சா கடுப்பாகும்..!!விஜய் டிவியில் இருந்து விலக இது தான் காரணம்!வி.ஜே பாவனா பகிர்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்தவர் தான் பாவனா. இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பிரபலமானார்.

ஆரம்ப கால கட்டங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதேபோல மாகாபா, விஜய் போன்ற தொகுப்பாளர்களுடன் சிறப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார்.

இந்த நிலையில், முதன் முறையாக அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய பர்சனல் விஷயங்கள் மற்றும் விஜய் டிவியில் இருந்து விலகியதற்கான காரணங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார் பாவனா. அதன்படி அவர் கூறுகையில்,


விஜய் டிவியில் பணியாற்றும் போது சிவகார்த்திகேயனுடன் நான் அதிகம் பேசியதில்லை. நான் தொகுப்பாளராக இருக்கும்போது அவர் விஜய் டிவியில்  கண்ட்ஸ்டெண்டாக இருந்தார். ஏனோ எனக்கும் அவருக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்தது. நான் அவருடன் மற்றவர்களுடன் பேசுவது போல சகஜமாக பேசமாட்டேன். 


ஆனால் மாகாபாவுக்கும் எனக்கும் நல்ல சிங்க் இருந்தது. ஏனைய தொகுப்பாளர்களுடன் பணியாற்றும் போது என்ன பேச வேண்டும் என எழுதி வைத்து தான் பேசுவோம். ஆனால் மாகாபாலுடன் அப்படி இல்லை. ஸ்பாட்டில் என்ன காமெடி வருதா அதை சொல்லிவிடுவார். அத்துடன் எனக்கும் பேச ஸ்பேஸ் கொடுப்பார்.


அதேபோலத்தான் தொகுப்பாளர் விஜய்யும். என்னை அவர்  குருநாதா என்று தான் அழைப்பார். அவர் மிகவும் திறமையானவர். அவருடன் பல நிகழ்ச்சிகளை நான் தொகுத்து வழங்கியுள்ளேன்.

ஆனாலும், என்னை பார்க்கும் சிலர் ஏன் இதுவரை குழந்தை இல்லை என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்வி எனக்கு எவ்வளவு வலியை கொடுக்கும் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. இது போன்ற கேள்விகளை கேட்டாலே எனக்கு கடுப்பாகிறது. இவர்களைப் பார்த்து எனது பர்சனலில் தலையிட நீங்கள் யாரென கேட்க தோன்றும் என தன்னுடைய பர்சனல் விஷயங்கள் குறித்தும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாவனா.

Advertisement

Advertisement