• Dec 26 2024

இருக்கிற படத்தை முடிக்கவே பணமில்லை.. அதுக்குள்ள லைகாவின் இன்னொரு பெரிய பட்ஜெட் படமா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும்வேட்டையன்கமல்ஹாசன் நடித்து வரும்இந்தியன் 2’ மற்றும்இந்தியன் 3’ அஜித் நடித்துவரும்விடாமுயற்சிஉள்பட ஒரு சில படங்களை தயாரித்து வருகிறது என்பதும் ஒரே நேரத்தில் பெரிய நடிகர்களின் படத்தை தயாரித்து வருவதால் இந்நிறுவனத்திற்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் லைகாவுக்கு கை கொடுக்க பல முக்கிய நபர்கள் இருப்பதாகவும் அதனால் பொருளாதார சிக்கலை அந்த நிறுவனம் எளிதில் சமாளித்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இருக்கிற படங்களையே முடிக்க முடியாமல் பொருளாதார சிக்கலில் லைகா இருப்பதாக கூறப்படும் நிலையில் அடுத்ததாக இன்னொரு பெரிய படத்தை இந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும்வேட்டையன்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க வாய்ப்பு இருப்பதாகவும் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தின் லீட் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



இயக்குனர் ஞானவேல் இதுகுறித்து லைகாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது கண்டிப்பாக இரண்டாம் பாகத்தையும் எடுத்து விடுவோம் என்று அவர்கள் உத்தரவாதம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பட்ஜெட் அதிகமாகும் என்று இயக்குனர் தரப்பில் கூறப்பட்டதையும் லைகா நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் முதல் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றால் கண்டிப்பாக இரண்டாம் பாகத்தை எடுத்து விடுவோம், செலவு பற்றி கவலை இல்லை என்று லைகா கூறியதாகவும் கோலிவுட் செய்திகள் பரவி வருகிறது.

எனவேவேட்டையன்படம் ரிலீஸ் ஆனவுடன் அந்த படம் வெற்றி பெற்றால் உடனேவேட்டையின் 2’ படமும் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement