• Dec 25 2024

ஹோட்டலில் ராஜீயை கண்டதாக சொல்லும் பாக்கியா... ராஜீ கன்னத்தில் பளார் என்று அறைந்த கோமதி... தற்கொலை செய்து கொள்ள போகும் ராஜீ... நாளைய நாளுக்கான எபிசோட்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் தொடர் நல்ல விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் நாளைய நாள் என்ன நடைபெற போகிறது என பார்ப்போம் வாங்க. 


கோமதி,கதிர் மற்றும் மீனா வீட்டுக்கு போறதுக்காக ரெடியாகிட்டு வெளிய வாரங்க அப்போ பாக்கியா, எழில் எல்லாரும் வீட்டுக்கு போறதுக்காக ரெடியாகி வாரங்க. பாக்கியா ஓடிப்போன உங்க அண்ணே பொண்ண காட்டுங்கனு சொல்லுறாங்க கோமதியும் போன்ல போட்டோ காட்டுறாங்க அத பார்த்த பாக்கியா இது உங்க அண்ணே பொண்ணா ஒருக்கா மறுபடி ரூம்க்கு வாங்க என்று அவசரமாக கூட்டிட்டு போறாங்க.


கோமதி, கதிர், மீனா ஒன்னும் புரியாம இருக்குறாங்க என்ன பாக்கியா என்னாச்சின்னு கேக்குறாங்க பாக்கியா நாங்க தங்கின ஹோட்டல்ல தான் ராஜியும் தங்கி இருக்கா நான் பார்த்தேன் என்று கூறுகிறார். இதனை கேட்ட மூவரும் அதிர்ச்சி ஆகின்றனர்.


உடனே கோமதி எந்த ரூமில் இருக்கிறாங்க என்று கேட்டு உடனே அங்கே செல்கிறார். அவர்களை கண்ட ராஜி அதிர்ச்சியாகி விடுகிறார். கோமதி ராஜீயை கோபத்தில் போட்டு நன்றாக அடித்து விட்டு நான் பண்ணின தப்பை ஏன் நீயும் பண்ணுற உன்னால என்னோட அண்ணா தூக்கு மாட்டிக்க போய்ட்டாரு என்று சொல்கிறார். 


அதனை கேட்ட ராஜி அதிர்ச்சியாகி விடுகிறார். ஒரு பக்கம் கோமதி புலம்பி அழுது கொண்டிருக்கிறார். பாக்கியா உட்பட அனைவரும் ஆறுதல் சொல்கின்றனர். அந்த நேரம் ராஜீ ரூமிற்கு அழுதுகொண்டே செல்கிறார். அதனை கவனித்த எழில் மனைவி ராஜீ எங்க போற என்று கேட்கிறார். நான் எல்லாம் உயிரோடையே இருக்க கூடாது என்று ரூமிற்கு சென்று கதவை சாத்தி கொள்கிறார். எதாவது செய்து கொள்வாள் என எல்லோரும் சேர்ந்து கதவை தட்டுகின்றனர். 


ஒருவாறு உள்ளே சென்று கையில் கத்தியுடன் இருந்த ராஜியை தடுத்து நிறுத்தி நடந்ததை கேட்கின்றனர். கண்ணனை ராஜிக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்ட பாக்கியா இனி என்ன செய்வார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.   

Advertisement

Advertisement