• Dec 25 2024

அரைச்ச மாவையே அரைக்கும் பாக்கியலட்சுமி சீரியல்.! பிள்ளைகள் அடித்த ஜால்ரா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் இல், கோபி வீட்டுக்கு வெளியே வந்து நின்று பாக்கியாவை வெளியே வருமாறு சண்டைக்கு இழுக்கின்றார். உடனே இனியா வந்து கோபியை கட்டிப்பிடித்து அழ, ஒன்றுமில்லை என்று செழியனுக்கும் இனியாவுக்கும் ஆறுதல் சொல்லி, பாக்கியாவை வெளியே  கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

இதன் போது வெளியே வந்த பாக்யாவிடம் சண்டை போடுகின்றார் கோபி.. இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருப்பதோடு அதில் ஒருவர் வீடியோவும் எடுக்கின்றார். இதன் போது கோபி உன்ன சும்மா விட மாட்டேன் என்று ஆவேசத்தில் பேசிக்கொண்டிருக்க, பாக்யாவும் உங்களை ஜெயிலுக்கு அனுப்பாமல் விட மாட்டேன் என்று பதிலடி கொடுக்கின்றார்.

மேலும் பிடிக்காத கல்யாணம் பண்ணியதாக பாக்யாவை சுட்டிக்காட்ட, பாக்கியாவும் அதை நான் சொல்லணும்.. உங்களால நான் பட்ட கஷ்டம் போதும்.. உங்கள விவாகரத்து பண்ணின போது தான் பெருமூச்சு விட்டேன். அதுக்கு பிறகு தான் என்னை பற்றி நான் அறிந்து கொண்டேன்  என்று சரியான பதிலடி கொடுக்கின்றார். ஈஸ்வரி போதும் உள்ளே வா என்று கூப்பிடவும் கோபிக்கு பதிலடி கொடுக்கின்றார்.


அதன் பின்பு உள்ளே வந்த பாக்யாவிடம் மீண்டும் ஈஸ்வரி, செழியன், இனியா கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்குமாறு சொல்லுகின்றார்கள். ஆனாலும் இந்த முறை தான் பின்வாங்க போவதில்லை என்று பாக்யா உறுதியாக இருக்கின்றார் . பிறகு ஈஸ்வரியை சாப்பிட சொல்ல, தனக்கு போதும் நான் இப்படியே இருந்து மேல போய் சேருகிறேன் என்று சொல்லுகின்றார்.

இறுதியாக அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க பாக்யா கோபி சண்டை போட்டது போனில் வருகின்றது. இதை பார்த்த செழியன் ஜெனி, இனியாவுக்கு காட்டுகின்றார். அதன் பின்பு ஈஸ்வரி பார்த்துவிட்டு இதை எல்லாருமே பார்த்திருப்பார்கள். குடும்ப கவுரவம் போயிட்டு என்று பேசிவிட்டு செல்கின்றார்.

Advertisement

Advertisement