• Dec 26 2024

’மகாநதி’ தொடரில் கேமியோ கேரக்டரில் வருகிறார் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை.. யாராக இருக்கும்?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மகாநதி’ சீரியலில் ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்த நடிகை கேமியோ கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ’மகாநதி’. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட 300 எபிசோடுகளுக்கும் அதிகமாக இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.



லட்சுமி பிரியா, சுவாமிநாதன், பிரதீபா உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த சீரியல் இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ’பாரதி கண்ணம்மா’ சீரியல் நடித்த கண்மணி, சிறப்பு தோற்றத்தில் சில எபிசோடுகளில் மட்டும் வர இருப்பதாக கூறப்படுகிறது.

’பாரதி கண்ணம்மா’ ’அமுதாவும் அன்னலட்சுமியும்’ ஆகிய சீரியல்களில் நடித்த கண்மணிக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தமானது என்பதும், சன் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸ்வத் தான் மாப்பிள்ளை என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement