• Dec 26 2024

அனுஷ்காவுடன் நடித்த நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா? எலும்பு முறிந்ததால் அதிர்ச்சி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை அனுஷ்காவுடன் நடித்த நடிகர் எலும்பு முறிந்து மிகவும் பரிதாபமாக மருத்துவ சிகிச்சையில் இருக்கும் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நவீன் பொலிஷெட்டி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ’லைப் இஸ் பியூட்டிஃபுல்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான ’மிஸ் பொலிஷெட்டி மிசஸ் பொலிஷெட்டி’ என்ற திரைப்படத்தில் அவர் அனுஷ்கா ஷெட்டி உடன் நடித்திருந்தார் என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென நவீன் பொலிஷெட்டிக்கு விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் வலது கரத்தில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  காலிலும் பலத்த காயம் ஏற்பட்டதால் நடக்க முடியவில்லை என்றும் அவர் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கூடிய சீக்கிரம் குணமாகி வருவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவரது இந்த பதிவுக்கு சமந்தா உட்பட பலரும் நீங்கள் கண்டிப்பாக விரைவில் குணமாகி வருவீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement