• Apr 23 2026

அர்ச்சனாக்கு ஆதரவான தனது பதிவை திடீரென நீக்கிய பிக்பாஸ் ஆரி! யாருமே எதிர்பார்கலையே..!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில், பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகப்படியான Wild Card போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். அதன்படி, கானா பாலா, அன்ன பாரதி, பிராவோ, அர்ச்சனா ஆகியோர் உள்ளே வந்தனர்.எனினும், கானா பாலா, அன்ன பாரதி, பிராவோ ஆகியோர் வெளியேற, இதில் தினேஷ், அர்ச்சனா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்கு அர்ச்சனா வந்த முதல் வாரத்திலேயே மாயா கேங்க்கும் அவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்தது. ஆனாலும், ஒட்டு மொத்த  Bully Gangயும் சமாளித்தார் அர்ச்சனா.இதை தொடர்ந்து, அர்ச்சனாவுக்கு ஆதரவு அதிகரித்தது.


எனினும், நாட்கள் செல்ல செல்ல அவரின் நடவடிக்கையால் ஆதரவு குறைந்து வருகின்றது. அதிலும் கடந்த வாரம் இவர் செய்த பல்வேறு விஷயங்கள் அவரின் நற்பெயரை குறைத்து விட்டது.

இந்த நிலையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ஆரி, அர்ச்சனா குறித்து போட்ட பதிவை நீக்கி இருக்கிறார். தற்போது குறித்த சம்பவம் தான் பேசுபொருளாகி உள்ளது.

 

Advertisement

Advertisement