• Dec 25 2024

மாமனார் ரஜனிக்காக மருமகன் தனுஷ் செய்த விடயம்... ரசிகர்களால் குவியும் பாராட்டுக்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய பிறந்ததினம் இன்று. பல்வேறு இடங்களிலும் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மனைவியை பிரிந்து இருந்தாலும் தனது மாமனாருக்காக அவர் செய்த விடையத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.   


தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவிற்கு என்ன காரணம் என இதுவரை இருவரும் கூறவில்லை. இந்த பிரிவிற்கு பின் இருவரும் அவரவர் வேளைகளில் பிசியாகிவிட்டனர். ஆம், தனுஷ் நடிப்பில் ஒரு பக்கம் பிசியாக இருக்க ஐஸ்வர்யா தன்னுடைய இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் வேளைகளில் பிசியாக இருக்கிறார்.


என்னதான் மனைவியை விட்டு பிரிந்தாலும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தனது முன்னாள் மாமனார் ரஜினிக்காக ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறார் தனுஷ்.


அது வேறு ஒன்றும் இல்லை, ரஜினியின் பிறந்தநாள் அன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவது தான். அதுவும் சாதாரணமாக சிம்பிள் விஷ் சொல்லாமல், பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என தான் கொண்டாடும் ஒரு நடிகரை கூறுவது போல் பேரன்புடன் கூறி வருகிறார் தனுஷ்.



Advertisement

Advertisement