• Dec 26 2024

ஜெயம் ரவி 34ல் பிக் பாஸ் சர்ச்சை பிரபலம்! ரைட்டராக இணையும் லியோ பிரபலம்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சர்ச்சைகளில் சிக்காத நடிகர் ஜெயம் ரவி தற்போது விவாகரத்து தொடர்பாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அது ஒரு பக்கம் இருக்க என்ன நடந்தால் என்ன என்னுடைய வேலையை நான் பார்ப்பேன் என்று தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். 


இதையடுத்து டாடா படத்தை இயக்கிய கலோஷ் பாபு இயக்கும் தனது 34வது படத்தில் விரைவில் நடிக்க போகிறார் ஜெயம் ரவி ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.


ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் திரைக்கதை ஆசிரியராக இயக்குனர் ரத்னகுமார் இணைந்திருக்கிறார். இந்த ரதன்குமார் மேயாதமான்,ஆடை போன்ற படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம்,லியோ மற்றும் கூலி போன்ற படங்களில் டயலாக் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement