• Dec 26 2024

அம்மாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் எஸ்கேயின் செல்ல மகள்! ட்ரெண்டிங் போட்டோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் தனது விடாமுயற்சியின் காரணமாக தற்போது தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் சின்னத் திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் நாயகனாக காணப்படுகின்றார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கி வந்தவர் தான் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருப்பார். இதை தொடர்ந்து மெரினா, மனங்கொத்தி பறவை போன்ற படங்களில் நாயகனாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதை தொடர்ந்து சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக அயலான் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு களித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


இதைத் தொடர்ந்து தற்போது அமரன் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். உண்மையான கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு 31-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. மூன்று குழந்தைகளுக்கு அப்பாவான சிவகார்த்திகேயனுக்கு மகள் ஒருவர்  உள்ளார். தற்போது அவருடைய மனைவி மகளது புகைப்படம் படு வைரலாக  பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement