• Dec 25 2024

டூபீஸ் உடையில் கவர்ச்சி குளியல் போடும் பிக் பாஸ் மாயா... வீடியோவை பார்த்து உருகும் பேன்ஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

மதுரையில் பிறந்து வளர்ந்தவர் தான் மாயா கிருஷ்ணன். இவர் மேடை நாடகங்கள் நடிப்பதில் மிகவும் ஆர்வமுடையவராக காணப்படுகின்றார். 

2015 ஆம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் பாடகியாக நடித்திருந்தார் மாயா. அதன் பின்பு தனுஷ் ஹீரோவாக நடித்த தொடரி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து துருவ நட்சத்திரம், 2.0 , மகளிர் மட்டும், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். ஆனாலும் இவருக்கு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தான். அதில் அவர் சின்ன ரோலில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் அவரது கேரக்டர் ரீச் ஆகி இருந்தது.


இதை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் நடித்திருந்தார் மாயா.  அதன்பின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றிய மாயா, இறுதியில் வெற்றி பெறுவார் என பலரும் நம்பிய நிலையில் நூழிலையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.

அதன் பின்பு தெலுங்கு சினிமாவில் தற்போது ஹீரோயினாக நடித்து வரும் மாயா, அடிக்கடி வெளிநாட்டுக்கு வெக்கேஷன் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது அட்லாண்டிக் கடலில் பிகினி உடையில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாயா. அதில் அவர் கவர்ச்சியாக குளியல் போட்டதை அடுத்து குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement