• Dec 26 2024

இந்தியன் 2 கிளைமாக்ஸ் காட்சி பார்த்து கண்டிப்பாக அழுவீர்கள்! பாபி சிம்ஹா அதிரடி பேட்டி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் சங்கர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றது. இந்த படம் மீது ரசிகர்கள் மட்டுமின்றி ஹாலிவுட் திரையுலகமே பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றது.

இந்தியன் 2 படத்தில் கமலஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை 12ஆம் தேதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படம் ரிலீசாக இன்னும் சில நாட்களை இருக்கும் நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.


இந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் நடித்த பாபி சிம்ஹா பிரபல தனியார் யூடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், இந்தியன் 2 படம் அருமையாக உருவாகியுள்ளது. நாம் இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்ப்பு வைத்திருப்போம். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இந்தியன் 2 இருக்கும். இந்த படம் முடியும்போது கண்டிப்பாக கண் கலங்கி அழுவீர்கள்.

இரண்டாவது பாகமே இப்படி இருக்குது என்றால் மூன்றாவது பாகம் வேற வேற லெவலில் இருக்கும். நீங்கள் கண்டிப்பாக படத்தை பார்க்கத்தானே போகின்றீர்கள். சங்கர் சாரின் மேக்கிங் எல்லாமே வேற லெவலில் இருக்கும்.

அதிலும் இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த விவேக் சாரும் உள்ளார். அவருடைய குரலை தொழில்நுட்பத்தின் மூலம் டப்பிங் செய்ய வைத்து எடுத்து உள்ளார்கள். அவர் சிறந்த காமெடியன் என்பதை தவிர்ந்து சோசியல் சர்வீஸ் செய்வதில் மிகப்பெரிய பங்காற்றி உள்ளார் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement