• Apr 17 2026

பிக்பாஸ் பூர்ணிமாவுக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்! தொடர்ந்து குவியும் பட வாய்ப்புகள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலக நடிகையும் , யூ டியூப் பிரபலமுமான பூர்ணிமா ரவி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

இவர் 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில்  1995-ஆம் ஆண்டு பிறந்த இவர், அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து, இளங்கலை பட்டத்தையும் வென்றுள்ளார். இதையடுத்து தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

தனது நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு, இணையத்தள யூ டியூப் சேனல் ஒன்று தொடங்கி, அதில் பல விஷயங்களை பகிர்ந்து,  யூ டியூப் பிரபலமாக சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார்.


இதை தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் 2023ஆம் ஆண்டு ஒளிபரப்பான  பிக் பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் பங்குபற்றி, இறுதியில் 16 லட்சம் பணப்பெட்டியுடன் வெற்றிகரமாக வீடு திரும்பினார்.


சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘செவப்பி’ மற்றும் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' இந்த திரைப்படம் நாளைய தினம்( மார்ச் 8) வெளியாகவுள்ளது. என்ற படங்களின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார்.

இந்த நிலையில், தற்போது அவரை முதன்மைப்படுத்தி (female lead characters) நிறைய பட வாய்ப்புகள் தனக்கு கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ளார். அதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement