• Dec 26 2024

அனிருத்ட மியூசிக் டேலண்டை கண்டுபிடிச்சது ஐஸ்வர்யா புருஷனா? அவர் இல்லை என்றால்...? ஐஸ்வர்யா பளீச்!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார்.

தற்கால இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், அடுத்தடுத்து அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

இப்போது தமிழை தாண்டி தெலுங்கு படங்களுக்கு கூட இசையமைக்க தொடங்கி இருக்கிறார். அண்மையில் அனிருத் டுபாயில் இசை கச்சேரிகள் நடத்தியிருந்தார். அந்த ஷோ நல்ல ஹிட்டடித்து.


இந்த நிலையில், அனிருத்துக்கு கீபோர்ட் வாங்கி கொடுத்து அவரது உயர்வுக்கு விதை போட்டவர் தனுஷ் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி அவர் மேலும் கூறுகையில்,

அனிருத்தின் இசை திறமையை உணர்ந்த தனுஷ், அவர் சினிமாவிற்கு வர வேண்டும் என்று தான் அவருக்கு முதல் முறையாக பியனானோ வாங்கி கொடுத்தார். அனிருத் தமது உறவினராக இருந்த போதிலும் அவரை சினிமாவிற்கு அழைத்து  வரவேண்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை.


ஆனால் தனுஷ் அந்த விஷயத்தில் உறுதியாக இருந்தார். அவர் தன்னுடைய 3 திரைப்படத்தின் மூலம் அனிருத்தை இசையமைப்பாளராக மாற்றினார்.

அவர் அப்படி செய்யவில்லை என்றால் அனிருத் வெளிநாட்டுக்குச் சென்று தன்னுடைய மேல் படிப்பை தொடர்ந்து இருப்பார். தன்னுடைய அசாத்தியமான திறமை மற்றும் உழைப்பாள்தான் அனிருத் தற்போதைய நிலைக்கு உயர்ந்துள்ளார் என மேலும் பாராட்டியுள்ளார் ஐஸ்வர்யா.

Advertisement

Advertisement