• Dec 26 2024

ரவீந்தருக்காக ஸ்பெஷல் Chair -ஐ ரெடி பண்ணிய பிக் பாஸ் ! கேள்விக் குறியான ஒரிஜினல் வெயிட்?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொண்டவர் தான் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர். இவர் லிப்ரா ப்ரொடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். குறித்த நிறுவனத்தின் மூலம் முருங்கக்காய் ஜீப்ஸ், சுட்ட கதை போன்ற படங்களை தயாரித்து உள்ளார். கடந்த ஏழு சீசன்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சிப்பவராக காணப்பட்டார். இதனால் அவர் ரசிகர்களால் பேட்மேன் என அழைக்கப்பட்டார்.

ரவீந்தரனின் முதலாவது திருமண  வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. அதற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் அந்த சமயத்தில் ஹைலைட் ஆகவே பேசப்பட்டது. அத்துடன் ரவீந்தரனை உருவக்கேலி செய்தும் ட்ரோல் செய்தும்  வந்தார்கள். மேலும் காசுக்காக தான் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்ததாகவும் பேசப்பட்டது.

பல விமர்சனங்கள் எல்லாவற்றையும் தாண்டி ஒரு தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் பிரபலமாகவும்உருவெடுத்தார் ரவீந்தர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர்  பிக் பாஸ் வீட்டில் டஃப் ஆன போட்டியாளராகவும் கருதப்படுகின்றார்.


பிக் பாஸில் நேற்று கொடுக்கப்பட்ட கேப்டன்சி டாஸ்க் ஓட முயற்சித்த ரவீந்தருக்கு காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத சூழ்நிலையில் காணப்பட்டார். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏதும் ஏற்பட்டால் வெளியேற்றப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

இந்த நிலையில், அதிக உடல் பருமனை கொண்ட ரவீந்தரரின் ஒரிஜினல் வெயிட் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அவரது உடல் எடை மொத்தமாக 125 கிலோ இருக்குமாம். இவருடைய உடலை தாங்கும் விதமாகவே பிக் பாஸ் குழுவினர் தனியாக சேர் ஒன்றை ரெடி பண்ணி வைத்துள்ளார்கள். இதனை ரவீந்தர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement