• Dec 26 2024

விஜய் அரசியலுக்கு போயிட்டா சினிமா ஒன்னும் படுத்துடாது..! பதிலடி கொடுத்த பிரபலம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வேட்டையாடி இருந்தது. கிட்டத்தட்ட 500 கோடி வசூலித்த கோட் திரைப்படம், தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் முன்பே லாபம் ஈட்டியதாக அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி  தெரிவித்து இருந்தார்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் நல்ல மார்க்கெட் உள்ள நடிகராகவும் காணப்படும் விஜய், தளபதி 69ஆவது படத்துடன் சினிமா துறையில் இருந்து விலகி முழு நேரமாகவே அரசியலில் பயணிக்க உள்ளார். இதன் காரணத்தினால் அடுத்த தளபதி யார் என்ற பேச்சும் ஏற்கனவே பேசப்பட்டது. அதே நேரத்தில் விஜய் சினிமாவை விட்டு விலகினால் அவருடைய இடத்தை நிரப்ப யாரும் இல்லை சினிமாவே படுத்து விடும் என்ற வகையில் பலவாறு பேசினர்.

இந்த நிலையில்,  நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருந்து விலகினால் மிகப்பெரிய பாதிப்பு வரும் என்ற பேச்சு அடிபட்ட போது, இது தொடர்பில் திருப்பூர் சுப்ரமணியம் பதிலடி கருத்தை தெரிவித்துள்ளார். 


அதன்படி அவர் தெரிவிக்கையில், விஜய் சினிமாவை விட்டு விலகினால் எந்த ஒரு பாதிப்பும் வராது. எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு யார் வருவார் என எதிர்பார்த்த போது கமலஹாசன், ரஜினிகாந்த் வந்தனர். அதன்பிறகு விஜய், அஜித் வந்தார்கள். அப்படி இவர்களுக்குப் பிறகும் அடுத்தடுத்த நடிகர்கள் ரசிகர்களை கவர்வார்கள் என்பதில் ஒரு சந்தேகம் இல்லை.

இப்போது விஜய் படங்களை விட பான் இந்திய படங்கள்தான் அதிக அளவு வசூலை குவித்து வருகின்றன. மொழி கடந்த நடிகர்கள்  வேறு மாநில ரசிகர்களையும் கவர்ந்து வரும் நிலையில் சினிமா மற்றும் தியேட்டர் தொழில் எந்தவித பாதிப்பையும் சந்திக்காது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்திற்கான டிக்கெட் புக்கிங் அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருப்பதும், இந்த படம் நிச்சயம் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ஜெயிலர் படத்தின் வசூலை விட வேட்டையன் திரைப்படம் அதிக வசூலை அள்ளும் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement