விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி வாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பல டுவிஸ்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அந்த ப்ரோமோவில் ஒரு அறையில் பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளர்களின் மகிழ்ச்சி, விளையாட்டு, மோதல் , நகைச்சுவை என அனைத்தையும் உணர்ச்சிகளையும் ஒருங்கிணைத்த புகைப்படங்கள் போடப்பட்டுள்ளது. மேலும் டாப் 6 போட்டியாளர்களுக்கு மெமரீஸ் வீடியோக்கள் போட்டு காட்டபடுகிறது. தங்களை மறந்து போட்டியாளர்கள் கண்ணீருடன் வீடீயோவை பார்க்கிறார்கள்.
சவுந்தர்யா " ரொம்ப உணர்ச்சிபூர்வமா இருக்கு பிக்பாஸ்" என்று சொல்கிறார். "இதை விட வாழ்க்கையில் வேற என்ன பெருசா கிடைக்க போகுது என்று தோணுது பிக்பாஸ்" என்று முத்துக்குமரன் சொல்கிறார். "இதுதான் நான் இதை எப்படி சொல்லி புரியவைக்கிறது என்று தெரியவில்லை" என்று பவித்ரா சொல்கிறார். மேலும் விஷால் "முழுமையா ரொம்ப எமோஷனலாகி இருக்கேன்" என்று சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.
Listen News!