• Jan 17 2025

ரோகிணி பற்றிய உண்மையால் விவாகரத்து முடிவெடுத்த மனோஜ்! பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் TRP ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சீரியல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். முத்து மீனாவிடம் குடிக்க பர்மிஷன் கேட்க மீனா கொடுக்க மறுக்கிறார். ஆனாலும் முத்து பிரண்டுக்காக குடிக்கிறார். 


மறுபக்கம் ரோகினி இடம் மனோஜ் வலிக்குதா என்று கேட்க இல்லை சில்லுனு இருக்குது என்று சொல்லு கோபப்படுகிறார் இப்ப நான் என்ன தப்பா கேட்டுட்டேன் என்று யோசிக்க பாத்ரூமுக்கு செல்கிறாள் ரோகிணி ஒரு போன் வர அதனை மனோஜ் எடுத்துப் பேசுகிறார். என்ன வாடகை வரல முதல்ல ஐந்தாம் தேதி கொடுத்து கிட்டு இருந்தீங்க இப்ப என்ன ஆச்சு என்று கேள்வி மேல் கேள்வி கேட்ட நீங்கள் யார் என்று மனோஜ் கேட்கிறார்.


அதற்கு வீட்டு ஓனர் என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் ரோகிணி வந்தவுடன் பெருங்களத்தூரில் யார் வீட்டுக்கு வாடகை கொடுக்கிற என்று கேட்க ரோகினி அதெல்லாம் ஒன்னும் இல்ல என் பிரண்டுக்கு தான். அதற்கு மனோஜ் என்கிட்ட எதுக்கு எல்லாத்தையும் நீ மறைக்கிற சிட்டி கிட்ட கடன் வாங்குன விஷயத்தை மறைச்ச இப்போ இந்த விஷயத்தை மறைக்கிற என்று சொல்லி சண்டை போட்டு விட்டு பாய் தலையணை எடுத்துக்கொண்டு மேலே சென்று விடுகிறார்.


மறுபக்கம் முத்து குடித்துவிட்டு வாயில் கொய்யா இலை மென்று கொண்டு வர மீனா என்ன சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க எனக்கு சந்தேகமா இருக்கு ஊதுக என்று சொல்ல முத்து ஊதியவுடன் மீனவால் நாற்றம் தாங்க முடியாமல் தள்ளிப் போகிறார். உங்களுக்கு நல்ல சேர்க்க இருந்தால் தானே உங்களுக்கு நல்லா புத்தி வரும் குடிகாரனுக கூட சேர்ந்தால் அப்படிதான் என்று திட்டுகிறார். முத்து கோபப்பட்டு என் பிரெண்ட்ஸ் பற்றி தப்பா பேசாத என்று சொல்லிவிட்டு பாய் தலையணையை எடுத்துக்கொண்டு மேலே செல்கிறார். 


ஸ்ருதி கோவமாக உள்ள உட்கார்ந்து கொண்டிருக்க ரவி வருகிறார். என் போன் எடுக்காத அளவுக்கு உனக்கு முக்கியமான வேலையா என்று ரவியிடம் கேட்கிறார். நான் ஒரு மீட்டிங்ல இருந்தேன் என்று சொல்லுகிறார்.  முடிய ஒரு கால் பண்ண ஏலாதா உனக்கு என்று சண்டை போடுகிறார். பேச முடியாத சுச்சுவேஷன் தான் இருந்தேன் எடுக்க மறந்துவிட்டேன் என்று சொல்ல மீண்டும் சுருதி மற்றும் ரவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ரவி பாய் எடுத்துக் கொண்டு மேலே வருகிறார்.


நிம்மதியா தூங்கலாம்னு வந்தா நிம்மதியே இல்லை அதான் வந்தேன் என்று சொல்கிறார். மூவரும் தங்களது மனைவிடம் ஏன் சண்டை போட்டோம் என்று சொல்கிறார்கள். அப்போ முத்து பேச்சிலர் லைப் தான் நல்லம் என்று சொல்கிறார். அதனை கேட்ட மனோஜ் அப்போ விவாகரத்து பண்ணிட்டா பேச்சிலரா இருக்கலாம் என்று சொல்ல முத்து- ரவி அதிர்ச்சியாக பார்க்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட் இனி என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம். 

Advertisement

Advertisement